தமிழ்நாடு செய்திகள்

தாம்பரம்: ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த பெண் பயணியை காப்பாற்றிய ஊழியர் - அதிர்ச்சி வீடியோ

Published On 2025-12-23 10:41 IST   |   Update On 2025-12-23 10:41:00 IST
  • ரெயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பலர் தவறி விழும் சம்பவம் அதிகரித்துள்ளது
  • அவரது உடனடி நடவடிக்கையால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த ஒரு பெண் பயணியை ரெயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய அதிர்ச்சி வீடியோவை தென்னிந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில், "கடந்த 20 ஆம் தேதி தாம்பரத்தில், கடற்கரை நோக்கிச் செல்லும் ரெயிலில் ஏறும் போது தவறி விழுந்த ஒரு பெண் பயணியை, டிக்கெட் பரிசோதனை ஊழியரான நிதிஷ் குமார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார்.

அவரது உடனடி நடவடிக்கையால் ஒரு பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது. இது அவரது கடமை உணர்வையும் பயணிகளின் பாதுகாப்பு மீதான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை காலமாக ரெயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் பலர் தவறி விழும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News