தமிழ்நாடு செய்திகள்

கோவை மாணவி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சாட்டும் நபர்களை கேள்வி கேட்ட பேரரசு

Published On 2025-11-06 14:48 IST   |   Update On 2025-11-06 14:48:00 IST
  • மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலத்காரம் செய்து உள்ளனர்.
  • 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காதலனுடன் காரில் விமான நிலையத்தின் பின்புறம் பிருத்தாவன் நகர் காட்டுப்பகுதியில் பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், மதுரையை சேர்ந்த குணா என்ற தவசி ஆகிய 3 பேர் காதலனை அரிவாளால் வெட்டி விட்டு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலத்காரம் செய்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் 3 பேருக்கும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 3 பேரையும் வருகிற 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் 'அந்த பெண்ணுக்கு அந்த நேரத்தில் அங்கு என்ன வேலை' என்று கூறி பாதிக்கப்பட்ட பெண்ணையே பலரும் குற்றம் சாட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்னலையில், இதுகுறித்து பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பேரரசு, "பெண்கள் முன்னேறிவிட்டார்கள் என்பது மிகப்பெரிய பொய். ஒரு பெண் தனியாக சென்றால் கெடுத்து விடுகிறார்கள். கோவை மாணவி வழக்கை பார்த்தால் மனம் பதறுகிறது. அந்த பெண் அந்த நேரத்தில் அங்கே போனால் என்று கேட்கிறார்கள். இரவு 11 மணிக்கு அந்த பொண்ணுக்கு அங்க என்ன வேலை என்று கேட்கிறார்கள். உங்க பொண்ணுக்கு நடந்திருந்தா இப்படித்தா பேசுவீங்களா. அண்ணா பல்கலைக்கழகத்திலும் அந்த பெண் புதருக்குள் போனா என்று சொல்கிறார்கள்... அப்படி போனால் கெடுப்பீர்களா?" என்று கோபத்துடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News