தமிழ்நாடு செய்திகள்

மத்திய தொல்லியல் துறைதான் கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் - அமர்நாத் ராமகிருஷ்ணன்

Published On 2025-07-26 14:34 IST   |   Update On 2025-07-26 14:34:00 IST
  • கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது
  • கீழடி அகழ்வாய்வு குறித்து தொல்லியல் துறை கேட்ட அனைத்து விபரங்களும் வழங்கப்பட்டு விட்டது.

கீழடியில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.

ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.

இதனையடுத்து, கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை. கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்தார்.

இந்நிலையில், கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய தொல்லியல் துறை வெளியிட வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் தொல்லியல்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவ்விழாவில் பேசிய அவர், "கீழடி அகழ்வாய்வு குறித்து தொல்லியல் துறை கேட்ட அனைத்து விபரங்களும் வழங்கப்பட்டு விட்டது. தற்போது நடந்திருப்பது ஒரு முதன்மையான ஆய்வு. இந்த ஆய்வு அறிக்கை மத்திய தொல்லியல் துறையால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் அது பல தொடர் ஆய்வுகளுக்கு வழிவகுக்கும்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News