தமிழ்நாடு செய்திகள்

தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலித்தேன்- செங்கோட்டையன் பதிவு

Published On 2025-09-06 10:47 IST   |   Update On 2025-09-06 10:47:00 IST
  • கழகம் ஒன்று பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறேன்.
  • எனக்கு பெரும் வரவேற்பை அளித்த அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட , புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வெற்றிகரமாக வழிநடத்தப்பட்ட, மாபெரும் மக்கள் இயக்கமான அஇஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், இன்னும் நூறாண்டுகள் தமிழக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற வகையில் பெரும்பான்மையான கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்து கழகம் ஒன்று பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறேன்.



இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியை அறிந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்து, எனக்கு பெரும் வரவேற்பை அளித்த அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றியை காணிக்கை ஆக்குகிறேன். நன்றி!! என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News