தமிழ்நாடு செய்திகள்

இலவசம் இல்லங்க அது... மக்கள் நல திட்டம்...- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

Published On 2025-04-05 21:13 IST   |   Update On 2025-04-05 21:13:00 IST
  • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டி.
  • பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல்.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டியை மக்கள் இன்னமும் தங்களின் வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

இலவசம் என்றார்கள்...

பொழுதுபோக்கு என்றார்கள்...

கலைஞருக்கு மட்டுமே தெரிந்தது அது,

பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல் என்று,

பெண்கள் வெளியுலகை எளிதில் எட்டி பார்ப்பதற்கு உதவும் ஜன்னல் என்று.

உலக செய்திகளை, உலகத்தின் வளர்ச்சியை, மனிதனின் படைப்புகளை தமிழர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஒளிக்கீற்று என்று.

தமிழினத்தை உலகம் போற்றும் மாபெரும் இனமாகவும் தமிழ்நாட்டை உலகே வியந்து பார்க்கும் வளர்ச்சியின் விளைநிலமாகவும் மாற்றக் கூடிய அற்புத விளக்கு என்று.

இலவசம் இல்லங்க அது.

மக்கள் நல திட்டம்.

பொழுதுபோக்கு இல்லைங்க அது,

பொது அறிவுப் பெட்டகம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News