தமிழ்நாடு செய்திகள்

முருக பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்வதாக வெளியான தகவல்- உண்மை என்ன?

Published On 2025-06-21 12:58 IST   |   Update On 2025-06-21 12:58:00 IST
  • மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்ப இருப்பதாக தெரிகிறது.
  • இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நாளை பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இதனிடையே நாளை மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. இந்த நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பதாக வெளியான செய்தி உண்மை அல்ல என ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சினிமா பி.ஆர்.ஓ. ரியாஸ் அகமது எக்ஸ் தளத்தில், "ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கும் முருகன் பக்தர்கள் மாநாட்டில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார் என்று உலாவரும் செய்தி பொய்யானது. தலைவர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள போவதில்லை" என கூறியுள்ளார்.

Tags:    

Similar News