மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல். கனமழை பெய்வதால் ஓடுபாதை முழுவதிலும் தண்ணீர் தேங்கி விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வங்கக் கடலில் உருவாகி உள்ள உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
புயல் கரையை நெருங்க தாமதமாக, தாமதமாக சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும் மரக்காணம் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்றும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள 'ஃபெஞ்சல்' புயல் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது வேகம் அதிகரித்துள்ளது.
கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடங்களில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால், பயணிகள் அதனை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தல்
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, சட்ட பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால், புழல் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 333 கன அடியாக உயர்வு
சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில் சென்னை மெட்ரோ ரெயில்கள் இன்று வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையில் இருந்து 30 பேர் கொண்ட 11 குழுக்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்தன
திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஃபெங்கல் புயல் கரையை கடக்க தாமதமாகும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெங்கல் புயல் கடந்த சில மணி நேரங்களாக 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.