தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-29 10:44 IST   |   Update On 2024-12-01 06:15:00 IST
2024-11-30 02:37 GMT

 ஃபெஞ்சல் புயல் காரணமாக கல்பாக்கத்தில் உள்ள சட்ராஸ் என்ற மீனவ கிராமத்தில் தற்போது 13 அடி வரை கடல் அலை எழுந்து, கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது.

2024-11-30 02:35 GMT

சென்னை மெரினாவில் கடல்சீற்றத்துடன் காணப்படுவதால் மக்கள் கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளது.

2024-11-30 02:34 GMT

சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில் வழக்கம்போல் புறநகர் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன.

2024-11-30 02:33 GMT

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

2024-11-30 02:32 GMT

ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கையாக தியாகராய நகர் ஜி.என். செட்டி ரோடு மேம்பாலத்தில் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

2024-11-30 01:58 GMT

சென்னையில் அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 7 செ.மீ. மழைப்பதிவு திருவொற்றியூர் - 5 செ.மீ, தண்டையார்பேட்டை - 4.6 செ.மீ., மணலி 4.2 செ.மீ மழைப்பதிவு; சென்னையில் சராசரியாக 3.45 செ.மீ. மழைப்பதிவு

2024-11-30 01:56 GMT

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2024-11-30 01:55 GMT

கனமழை, புயல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (30.11.2024) விடுமுறை அறிவிப்பு

2024-11-30 01:33 GMT

ஃபெங்கல் புயல் காரணமாக மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம்.

2024-11-30 01:30 GMT

ஃபெங்கல் புயல் காரணமாக "மிதமானது முதல் தீவிர மழையை கொடுக்கக்கூடிய மழை மேகங்கள் சென்னை கரையை தற்போது தொடுகின்றன. இதன் காரணமாக வரும் நேரங்களில் தீவிர மழையை எதிர்பார்க்கலாம்" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News