தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-29 10:44 IST   |   Update On 2024-12-01 06:15:00 IST
2024-11-30 01:29 GMT

ஃ பெங்கல் புயல் இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

2024-11-30 01:29 GMT

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

தற்போது திருச்சிக்கு 370 கி.மீ வடக்கிலும், நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே 210 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

2024-11-29 22:34 GMT

தமிழகத்தில் திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளில் சிறிய அளவிற்கு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என மாநில பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

2024-11-29 20:01 GMT

பெங்கல் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை சாலை, மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.

2024-11-29 18:54 GMT

பெங்கல் புயல் கரையை கடக்கும்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2024-11-29 17:48 GMT

பெங்கல் புயலின் நகரும் வேகம் 15 கி.மீட்டரில் இருந்து 12 கி.மீ ஆக குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-11-29 17:05 GMT

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-11-29 16:54 GMT

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-11-29 15:53 GMT

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக, நாளை காலையும், பிற்பகலிலும் நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2024-11-29 15:47 GMT

ஃபெங்கல் புயல் காரணமாக, வண்டலூர் பூங்கா நாளை ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News