மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
புயலின் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து 110 கிலோ மீட்டர் தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது
ஃபெஞ்சல் புயலினால் கனமழை பெய்து வரும் நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும்.புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70-80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
காற்றும் மழையும் வேகமாக இருக்கும் என்பதால் சென்னையில் நாளை (டிச.1) காலை வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் கரையை நெருங்கி வருவதை ஒட்டி சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் இன்று கத்திவாக்கத்தில் 12 செ.மீ. மழையும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூரில் தலா 9 செ.மீ. மழையும் மணலி சென்னை சென்ட்ரலில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை எண்ணூரில் இன்று சில மணிநேரங்களில்13 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னையில் உள்ள திரையரங்குகள் இன்று (30.11.24) ஒருநாள் மூடப்படுகின்றன. சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் கூட்டம் குறைவாக இருப்பதாலும் தியேட்டர்கள் மூடல்
சென்னையில் கனமழை பெய்து வரும்நிலையில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100% ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று ஆவின் நிர்வாக அதிகாரிகள் தகவல்