தமிழ்நாடு செய்திகள்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது...
- அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
- காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து மழை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவி வந்தது. தற்போது அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளையும் அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வை பொறுத்து மழை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 36 மணி நேரத்தில் உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி முன்னதாகவே உருவானது குறிப்பிட்டத்தக்கது.