தமிழ்நாடு செய்திகள்

"நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்" - நயினார் நாகேந்திரன்!

Published On 2025-12-04 19:20 IST   |   Update On 2025-12-04 19:20:00 IST
  • தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆத்திக சக்திகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி
  • அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்

திருப்பரங்குன்றம் மலைத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை வரவேற்பதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

"திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை இதயம் நெகிழ வரவேற்கிறேன்! 

தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுக்கும் ஆத்திக சக்திகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியைப் பறைசாற்றும் விதம் நூற்றாண்டு நிகழ்வு அரங்கேறியுள்ளது. முருக பக்தர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருக பக்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இதைக் கொண்டாடும் விதமாக, அனைத்து இல்லங்களிலும் அகல் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் என்றும் நம் இல்லங்களில் நாளை காலை "வெற்றிவேல்! வீரவேல்!'' என மாக்கோலமிட வேண்டுமெனவும் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றிவேல்! வீரவேல்!" எனக் குறிப்பிட்டுள்ளார். 


Tags:    

Similar News