தமிழ்நாடு செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்- 100 பேர் கைது

Published On 2025-12-04 14:07 IST   |   Update On 2025-12-04 14:07:00 IST
  • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட மறுத்தனர்.
  • அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜனவரி மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

திருப்பூர்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட மறுத்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜனவரி மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 

Tags:    

Similar News