தமிழ்நாடு செய்திகள்

திட்டக்குடியில் பலத்த மழை- கோவில் கோபுரம் இடிந்து விழுந்தது

Published On 2025-10-22 14:01 IST   |   Update On 2025-10-22 14:01:00 IST
  • அதிகாலை நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
  • இந்த கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் ஆகும்.

திட்டக்குடி:

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு கோவில் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பொயனபாடியில் பழமை வாய்ந்த செல்லியம்மன் ஆண்டவர் கோவில் உள்ளது.

வேப்பூர் மற்றும் திட்டக்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இக்கோவில் கோபுரம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் ஆகும். ஆகையால் தமிழக அரசு இந்த கோவிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அரசுக்கும், அறநிலைத்துறைக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில் கோபுரம் இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News