தமிழ்நாடு செய்திகள்

தவிர்க்க முடியாத சம்பவம்: இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வோம்- உதயநிதி ஸ்டாலின்

Published On 2024-11-13 13:49 IST   |   Update On 2024-11-13 13:49:00 IST
  • மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார்.
  • மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும்

தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.

மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

தாக்குதல் நடத்திய விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் ஆய்வு செய்தார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அரசு மருத்துவரின் உடல்நிலை குறித்து உதயநிதி கேட்டறிந்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

மருத்துவர் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருகிறது. அவரது தலைப் பகுதியில் 4 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக சிகிச்சையில் இருந்த தாயாருடன் வருபவர் என்பதால் சந்தேகம் எழவில்லை. இது தவிர்க்க முடியாத சம்பவம். இதுபோல் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம். மருத்துவர் குடுப்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளோம். 



Tags:    

Similar News