கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து- விஜய் புறக்கணிப்பு?
- முக்கிய நிகழ்வுகளின்போது முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாக உள்ளது.
- தேநீர் விருந்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
சென்னை:
இந்திய குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாக உள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ராஜ்பவனில் இன்று அளிக்கப்பட உள்ள தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் கவர்னரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே புறக்கணித்துள்ளனர்.