தமிழ்நாடு செய்திகள்

துப்புரவு தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2025-07-11 10:25 IST   |   Update On 2025-07-11 10:25:00 IST
  • தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
  • 9 மாதங்கள் கழித்து அரசாணை வெளியிடப்பட்டது.

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கிராமப்புற துப்புரவு தொழிலாளர்களும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களும் குறைந்தபட்சக் கூலி மறுக்கப்படுவதாக தெரிவிப்பது தமிழக அரசின் மனிதாபிமானமற்ற ஆட்சியை வெளிப்படுத்துகிறது. கிராம ஊராட்சிகளின் சுகாதாரம் பேண துப்புரவு பணியாளர்களும், குடிநீர் வினியோகம் செய்ய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களும் என சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். 9 மாதங்கள் கழித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இன்றைக்கும் பல இடங்களில் இந்தத் தொகை வழங்கப்படவில்லை.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு ரூ. 1,400 உயர்த்தி மாதம் ரூ.4,000 ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கும் 10 மாதங்கள் கழித்துதான் அரசாணை வெளியிடப்பட்டது. இதுவும் இன்னும் முழுமையாக அமலாக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News