தமிழ்நாடு செய்திகள்

செஞ்சியில் வளர்ப்பு நாய்க்கு நினைவிடம் கட்டி வைத்துள்ள பிரெஞ்சுக்காரர்கள்

Published On 2025-04-08 10:22 IST   |   Update On 2025-04-08 10:22:00 IST
  • 1914-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
  • சமாதியில் பிரந்தா எ டியர் டாக் 26 நவம்பர் 1914 என்ற தேதியையும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்துள்ளனர்.

செஞ்சி:

செஞ்சியில் பிரெஞ்சுகாரர்கள் வளர்ப்பு நாய்க்கு நினைவிடம் கட்டி வைத்துள்ளனர்.

1914-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அப்போது அவர்கள் தங்குவதற்காக செஞ்சி-திண்டிவனம் சாலையில் சங்கரபரணி ஆற்றின் அருகே தாழ்வாரம் உள்ள ஒரு அடுக்கு கொண்ட வீட்டினை செங்கற்களால் மிக அழகாக கட்டியுள்ளனர்.

பிரெஞ்சுக்காரர்கள் தங்களுடைய பாதுகாப்பு கருதியும் கவுரவமான வாழ்க்கை நடத்துவதில் ஆசை கொண்ட இவர்கள் மிகச் செல்லமாக வளர்த்து வந்த பிரந்தா என்ற பெயரிட்டுள்ள நாய் இறந்து விட்டதை இந்த பங்களாவுக்கு அருகிலேயே புதைத்து அதற்கு சமாதியும் அமைத்துள்ளனர்.

அவர்கள் வசித்த வீடு 110 வருடங்களுக்குப் பிறகும் இதுவரை நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை பங்களாவாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் அருகில் உள்ள நாய்க்கு கட்டப்பட்ட சமாதியும் இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

சமாதியில் பிரந்தா எ டியர் டாக் 26 நவம்பர் 1914 என்ற தேதியையும் ஆங்கிலத்தில் பொறித்து வைத்துள்ளனர். இது பார்ப்பவர்களை வியக்க வைத்துள்ளது. நூறாண்டுகளைக் கடந்த பங்களாவும் தற்போது பழமை மாறாமல் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் வந்தால் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News