தமிழ்நாடு செய்திகள்

மீன்கள் இனப்பெருக்கத்துக்காக வருகிற 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது

Published On 2025-04-11 08:39 IST   |   Update On 2025-04-11 08:39:00 IST
  • விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.
  • கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வருகிற 14-ந்தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்னர் கட்டாயம் கரை திரும்ப வேண்டும்.

ராமநாதபுரம்:

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் வருகிற 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவை படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.

61 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரும் முன்னர் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வருகிற 14-ந்தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்னர் கட்டாயம் கரை திரும்ப வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News