தமிழ்நாடு செய்திகள்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு- சிகிச்சைக்காக சென்னை வந்தவர் ரெயிலில் உயிரிழந்த பரிதாபம்

Published On 2024-12-03 11:07 IST   |   Update On 2024-12-03 11:07:00 IST
  • கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
  • ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவத்தால் புதுச்சேரி, விழுப்புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. அதே போல், ரெயில் பயணத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சைக்காக ரெயிலில் பயணித்த வாலிபர் ஒருவர் ரெயில் தாமதமாக இயக்கப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசியில் இருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பொதிகை ரெயிலில் அஜித் குமார் (27) என்பவர் பயணித்துள்ளார்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு இருந்த அஜித் குமார் சிகிச்சைக்காக சென்னைக்கு புறப்பட்டுள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் அஜித் குமார் பயணித்த பொதிகை ரெயிலும் நிறுத்தி வைக்கப்பட்டு, தாமதமாக புறப்பட்ட நிலையில் அவர் ரெயிலிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ரெயிலில் பயணித்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

Tags:    

Similar News