நட்பு சக்தி இல்லாவிட்டாலும் தனியாக நின்று ஜெயிப்போம்- த.வெ.க. தலைவர் விஜய் திட்டவட்டம்
- 38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
- நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் கதை ஒன்று சொல்வதாக விஜய் ஆரம்பித்தார்.
மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.
விஜய் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி னார். அப்போது அவர் மேடை ஏறி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதன் பிறகு அவர் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.
38 நாட்களுக்கு பிறகு விஜய் இன்று மீண்டும் மேடை ஏறி நிர்வாகிகள் மத்தியில் பேசி வருகிறார்.
அப்போது, நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் கதை ஒன்று சொல்வதாக விஜய் ஆரம்பித்தார்.
அவர் கூறியதாவது:-
சொந்த நாட்டையே ஒரு கூட்டம் அபகரிக்கிறது. சொந்த நாட்டிலேயே இருக்க முடியாத அளவிற்கு ஒரு நெருக்கடி ஏற்படுகிறது. அதனால் வேறு வழியில்லாமல், சொந்த நாட்டைவிட்டு வெளியேறி காடு, மலை என மறைந்து வாழ வேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது.
என்னடா, இப்படியே ஓடிக்கொண்டிருக்கிறோமே என்று, நட்பு கூட்டத்தை கூட்டி ஒரு பெரும் படையை திரட்டி அதிரடியாக ஒரு போரை நடத்தி, அந்த நாட்டையே திரும்ப மீட்டு எடுத்தது யார் தெரியுமா? நம் கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான ராணி வேலுநாச்சியார் அவர்கள்.
அவர்களுக் நட்பு சக்தியாக கூட இருந்து உழைத்தது, சின்ன மருது, பெரிய மருது மற்றும் சையஐ காரிகி அவர்கள் மூன்று பேர் தான். அன்னைக்கு இருந்த ஆங்கிலேய படை, ஆர்காட்டு படை போன்று இங்கு என்னென்ன படை இருக்கிறது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
இந்த ரெண்டு படை மட்டுமல்ல. இன்னும் எத்தனை படைகள் வந்தாலும், எதிர்த்து நின்று போராடுவதற்கு நல்ல தலைமையும், இத்தனை சக்தியும் என்னுடன் இருக்கும்போது நம் நாட்டை நம்மால் மீட்டெடுக்க முடியாதா? என்ன?
அதுவும் இந்த தவெக படை நட்பு சக்தி இருந்தாலும், இல்லை என்றாலும் தனியாளாக நின்று ஜெயிக்கும் படை.
தைரியமான பெண்கள் நிறைந்த படை நம்முடன் இருக்கிறார்கள். பெண்கள் படை பார்த்து தான் அரசியல் அரங்கமே அதிர்ந்துபோய் இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.