தமிழ்நாடு செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்

Published On 2024-12-01 18:42 IST   |   Update On 2024-12-01 18:42:00 IST
  • ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.
  • வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது.

இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், புதுச்சேரி மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் பாதிராபுலியூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வேளாண் பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்து விவசாயிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

Tags:    

Similar News