தமிழ்நாடு செய்திகள்

தன் உயிரை துச்சமென மதித்து சிறுவனை காப்பாற்றிய இளைஞருக்கு மோதிரம் பரிசளித்த இ.பி.எஸ்.

Published On 2025-04-21 19:49 IST   |   Update On 2025-04-21 19:49:00 IST
  • மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த மழை நீரில் சிறுவன் கால் வைத்தபோது மின்சாரம் தாக்கியது.
  • அந்த வழியாக வந்த இளைஞர் அச்சிறுவனை துணிச்சலுடன் காப்பாற்றினார்.

கடந்த 16.4.2025 அன்று சென்னை அரும்பாக்கம் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ரேகன் (வயது 8) என்ற 3-ம் வகுப்பு மாணவன், தண்ணீரில் காலை வைத்தவுடன் மின்சாரம் தாக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக்கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தஞ்சாவூர், ஒரத்தநாட்டைச் சேர்ந்த

கண்ணன் என்ற இளைஞர் உடனடியாக அச்சிறுவனைக் காப்பாற்றினார்.

தன் உயிரைத் துச்சமென மதித்து அச்சிறுவனைக் காப்பாற்றிய இளைஞரின் துணிவைப் பாராட்டி, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இளைஞர் கண்ணனை தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து அவரது துணிவைப் பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்து வாழ்த்தினார்.

Tags:    

Similar News