தமிழ்நாடு செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Published On 2025-09-09 20:56 IST   |   Update On 2025-09-09 20:56:00 IST
  • சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.
  • சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய திருநாட்டின் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள ஆளுநர் சி.பி. ராதாகிருண்ஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திறம்படப் பணியாற்றிய அவர்தம் பொதுவாழ்விற்கும், தொடர் அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிகச் சிறந்த அங்கீகாரம் ஆகும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராகத் தேர்வு செய்தமைக்கு இந்தியப் பிரதமர் மோடிக்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், தேசியத் தலைவர் நட்டாவிற்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் சி.பி. ராதாகிருண்ஷ்ணன் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

Tags:    

Similar News