தமிழ்நாடு செய்திகள்

டெல்லி பயண விவகாரத்தில் இபிஎஸ் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் - மு.க.ஸ்டாலின்

Published On 2025-05-27 13:26 IST   |   Update On 2025-05-27 13:26:00 IST
  • எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.
  • டெல்லிக்கு வெள்ளைக் கொடியோ, காவிக் கொடியோ கொண்டு செல்லவில்லை

டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நானும் டெல்லிக்கு போனேன்... நானும் தலைவர் தான்" என்று இத்தோடு 5 முறை புலம்பித் தள்ளிவிட்டீர்கள். மு.க.ஸ்டாலின் போதும்ம்ம்ம்ம்! மூன்று ஆண்டுகள் NITIAayog கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என வீடியோ நாடகம் நடத்திவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன்?

தமிழ்நாட்டுக்கான நிதி"க்காகவா இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் நிதி"-க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்…? அதற்க்கான உண்மை பதில் என்ன? ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே?

உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள "நிதி"களையும், அவர்களுக்கு துணையான "தம்பி"களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்? அதுவும் மண்ணோடு மண்ணாகிப் போனதாமே?" என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதறகு பதில் அளித்த அவர், "எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. அரசை குறை சொல்ல எதுவும் கிடைக்காததால் ஏதோ ஒரு குற்றச்சாட்டை இபிஎஸ் வைக்கிறார். டெல்லி பயண விவகாரத்தில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ், டெல்லிக்கு வெள்ளைக் கொடியோ, காவிக் கொடியோ கொண்டு செல்லவில்லை என ஏற்கெனவே கூறிவிட்டேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News