தமிழ்நாடு செய்திகள்

22-ந்தேதி முதல் அமல்..!- கடைகளில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பட்டியல் வைக்க வேண்டும்- நிர்மலா சீதாராமன்

Published On 2025-09-14 14:52 IST   |   Update On 2025-09-14 14:52:00 IST
  • பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் இன்று நடந்தது.
  • சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு வருகிற 22-ந்தேதி அமலுக்கு வருகிறது.

ஜி.எஸ்.டி. வரி சீரமைப்பு பற்றி வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி உயரும் பாரதத்திற்கான வரி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் இன்று நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது தமிழ் பேசக்கூடிய ஒரு அமைச்சராக ஜி.எஸ்.டி. வரி பற்றி மக்களுக்கு விளக்கும் பணியை எனக்கு வழங்கி என்னை பிரதமர் தமிழ்நாட்டுக்கு அனுப்பினார்.

அப்போது மேடையில் நான் பேசியபோது விக்கிரம ராஜா இருந்தார். இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும், மக்களுக்கு கஷ்டமாக இருக்குமே என்று அப்போது விக்கிரமராஜா எடுத்து சொன்னார்.

அவர் எடுத்து சொன்னதால் திரும்பவும் நான் சென்று அறிக்கை கொடுத்து என்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலமாக முன்னேற்றம் ஏற்படுத்திக் கொண்டே வந்தோம். அதற்காக விக்கிரமராஜாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

5, 12, 18, 28 சதவீதமாக இருந்த ஜி.எஸ்.டி. இப்போது 5, 18 என்கிற 2 வகைகளுக்கு வந்துவிட்டது. காலையில் எழுந்ததும் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் இருந்து இரவு தூங்குவதற்கு முன்பு நமக்கு தேவைப்படும் பொருட்கள் வரை ஏழை, நடுத்தர வர்க்கம், பணம் இருக்கின்றவர்கள் எல்லோரும் பயன்படுத்தக் கூடிய எந்த வகையான பொருளாக இருந்தாலும் ஜி.எஸ்.டி. தாக்கம் இருக்கும்.

அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அது 28 சதவீதமாக இருக்குமா? 18 சதவீதமாக இருக்குமா? என்கிற காலம் போய் இன்றைக்கு 5 அல்லது 18 சதவீதத்துக்குள் எல்லாப் பொருட்களும் வந்து விடுகிறது என்பதுதான் முக்கியமான அம்சம்.

12 சதவீதத்தில் இருந்த பொருட்கள் 5 சதவீதத்துக்கு வந்துள்ளது. மேலும் 12 சதவீதத்தில் இருந்த சில பொருட்களுக்கு முழுமையாக வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதே போல் ஏற்கனவே 18 சதவீதத்தில் இருந்த 90-க்கும் மேற்பட்ட பொருட்கள் 5 சதவீதமாகவும் குறைந்துள்ளது. சில பொருட்களுக்கான வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்துக்கு வந்துள்ளதால் எவ்வளவு விலையை குறைத்துள்ளோம் என்பதை பாருங்கள்.

12-ல்இருந்து 5 சதவீதத்துக்கு வந்ததே குறைவுதான். அதிலும் 18-ல் இருந்து 5 சதவீதத்துக்கு வந்தது எப்பேர்பட்ட குறைச்சல் என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.

எப்போதும் நமது மீது அரசு வரி விதிக்கிறது, பளுவை ஏற்றுகிறது என்ற நிலை போய் இன்று பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உள்ளோம். 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத் துள்ளோம். 12 சதவீதத்தில் இருந்து சில பொருட்கள் வரி நீக்கப்பட்டுள்ளது.

இதனால் 140 கோடி மக்களுக்கு பலவிதமான பொருட்களும் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சதவீதம், அரை சதவீதம் அல்ல, கிட்டத்தட்ட 13 சதவீதம் வரை குறைத்து உள்ளோம்.

பல பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால் இதனுடைய தாக்கம் 140 கோடி மக்கள் மீதும் இருக்கும். இது நல்ல தாக்கம்தான். விலை குறைகிறது. விலை குறைந்தால் வீட்டில் நமக்கு செலவு மிச்சமாகும். அதை நீங்கள் எந்த வகையிலாவது உங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதோ, பெரிய வர்களுக்கு செலவு செய் வதோ அல்லது சேமிப்பாக வைப்பதோ உங்கள் கையில் இருக்கிறது.

பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து இதை தீபாவளிக்கு முன்பு குறைத்து விடுங்கள் என்றார். தீபாவளிக்கு முன்பு கொடுப்பதற்கு யோசித்துக் கொண்டிருக்கும்போது தென்னிந்தியாவில் நாம் அனைவருக்கும் தீபாவளி சமயத்தில் வீட்டில் துணி எடுப்பது, பலவிதமான பொருட்கள் வாங்குவது போன்ற பழக்கம் இருக்கிறது.

வடஇந்தியாவிலும் செய்வார்கள். ஆனால் வடக்கோ, குஜராத்தோ, மராட்டியமோ அல்லது துர்கா பூஜை நேரத்தில் மேற்கு வங்காளத்திலோ கூட நீங்கள் யோசித்து பார்த்தால் தீபாவளிக்கு முன்பே நவராத்திரி கால கட்டத்தில் வீட்டுக்கு நிறைய சாமான்கள் வாங்குவதோ அல்லது பிள்ளைகளுக்கு பொருட்கள் வாங்குவதையோ செய்வார்கள்.

தீபாவளியை மனதில் வைத்து பிரதமர் சொன்னார் என்றால் கூட எல்லா மாநிலத்தினரும் அமர்ந்தி ருக்கக் கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அவரவர்களுக்கு அவரவர்களின் பண்டிகையை மனதில் வைத்து நவராத்திரிக்கு முன்பே செய்து விட வேண்டும் என்பதால் முன்கூட்டியே செய்துவிட்டோம்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைத் துள்ளது. அவர்கள் பல முறை கோரிக்கை வைத்தால் கூட இன்றைக்கு ஒரேயடியாக எல்லா கட்டமைப்புகளையும் மாற்றி விட்டு தொழில் செய்பவர்களுக் கும், வணிகத்தில் இருப்பவர் களுக்கும் சுலபமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை எளிமைப்படுத்தி வரியையும் குறைத்து உள்ளோம். இதனால் எல்லா மக்களுக்கும் பயன் இருக்கி றது.

12 சதவீதத்தில் இதுவரை இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீதத்துக்கு குறைந்துள்ளது. 1 சதவீதம் மட்டுமே 18 சதவீதத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத் தப்பட்டபோது 65 லட்சம் பேர்தான் வரி கட்டினார்கள். அதில் தொழில் துறையினர் மற்றும் வியாபாரிகள் அடங்குவர். ஆனால் இன்று ஜி.எஸ்.டி. வரியை 8 வருடத்தில் 1½ கோடி பேர் கட்டுகி றார்கள்.

ஜி.எஸ்.டி. ஒரு பெரிய கப்பர்சிங் வரி என்று எதிர்க்கட்சி தலைவர் ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அது கப்பர் சிங் வரியாக இருந்திருந்தால் தொழிலோ, வர்த்த கமோ 65 லட்சத்தில் இருந்த வர்கள் ஏன் 1½ கோடி பேர் ஜி.எஸ்.டி.யில் சேர்ந்தார்கள். அது சுலபமாக இருக்கிறது.

எங்கு பொருள் வாங்கினாலும் அதே விலையில் கிடைக்கிறது. பொருள் வாங்கி அதை இன்னும் முன்னேற்றம் அடைய செய்து ஏற்றுமதிக்கு கூட பயன்படுத்துகிறீர்கள். அதனால் நுகர்வோர் மட்டும் வரி கட்டவில்லை. பொருள் தயாரிப்பவர்களும் வரி கட்டுகிறார்கள்.

ஜி.எஸ்.டி.யில் வருவதால் நமக்கு ஆதாயம் இருக்கிறது என்று சொல்லி வந்ததால் 65 லட்சத்தில் இருந்து 1½ கோடியாக கூடி இருக்கிறது.

2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. வரி ரூ.7.9 லட்சம் கோடி யாக வசூலானது. அது இன்று ரூ.22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு மாதம் ரூ.1.9 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருமானம் கிடைக்கிறது. இதை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆளுக்கு 50 சதவீதமாக பிரித்துக் கொள்கிறோம்.

ரூ.1.8 லட்சம் கோடி வருமானம் வந்தால் அது ரூ.90 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கும், ரூ.90 ஆயிரம் கோடி மாநில அரசுக்கும் செல்கிறது. அதன் பிறகு ரூ.90 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வருவதில் கூட கிட்டத்தட்ட 41 சதவீதம் மாநில அரசுகளுக்கு போகி றது. அதனால் 100-ல் 23 சதவீதம்தான் மத்திய அர சுக்கு கிடைக்கிறது. ஜி.எஸ்.டி. மூலமாக மக்களுக் கும் பலன் கிடைத்துள்ளது. மாநில அரசுகளுக்கும் பயன் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு ஜி.எஸ்.டி.யில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன் னால், மோடி ஏன் இப்படி செய்கிறார். நிர்மலா சீதா ராமன் என்ன செய்கிறார், அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜி.எஸ்.டி.யை நடத்த தெரியாது என்று விமர்சனம் செய்தார் கள். அதை நாங்கள் பொறு மையாக காதில் கேட்டுக் கொண்டிருந்தோம். அப்படி சொல்லாதீர்கள் என்று நாங்கள் யாரையும் எதிர் மறையாக பேசவில்லை.

ஆனால் இவ்வளவு நாளில் மாநில அரசுகளுக்கு பலவிதமான நல்லது நடந்தி ருக்கிறது. மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்ப தையும் எடுத்து சொன்னேன்.

அந்த நல்லதுக்கு பிரதமர் மோடி, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம் என்று யாரும் சொல்ல வில்லை. சொல்லாமல் போனால் கூடஎனக்கு பரவாயில்லை. நாட்டுக்காக நாம் செய்கிறோம், எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை.

சொல்லாவிட்டாலும் இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன? மாநிலங்களில் இருந்து வரும் நிதித்துறை அமைச்சர் கள் வந்து அமர்ந்து ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கிறார்கள்.

இத்தனை நாளாக செய்த நல்லதில் அவர்களும்தான் இருந்தார்கள். இன்றைக்கு செய்கிற நல்லதிலும் அவர் கள்தான் இருக்கிறார்கள். இந்த முடிவை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இருந்த அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் சேர்ந்து தான் எடுத்தார்கள்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் கெட்ட பெயர் வரும் போதோ, திட்டும் போதோ பிரதமர் மற்றும் என்னை சொல்லிக் கொண் டிருந்தவர்கள் இன்றைக்கு நல்ல இவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கிறோம். அதிலும் மாநில அரசுகளுக்கு பங்கு இருக்கிறது என்பதை நானே எடுத்து சொல்ல விரும்புகிறேன்.

அதைத்தான் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலும் நான் சொன்னேன். பத்திரி கையாளர்கள் சந்திப்பிலும் சொன்னேன். மாநிலங்களில் இருந்து வந்திருக்கக் கூடிய எல்லா நிதி அமைச்சர்க ளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். எல்லோரும் ஒத்துழைத்து இந்த முடிவை எடுத்தார்கள்.

மக்கள் நலன் கோரி வரி விகிதத்தை குறைக்கும் போது அந்த நன்மை மக்க ளுக்கு போய் சேர விடாமல் தடுப்பதற்கு யாருக்கு மனதில் தைரியம் இருக்கும். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இதைப்பற்றி சர்ச்சை ஏற் பட்டதா? என்று பத்திரிகை யாளர்கள் என்னிடம் கேட்டனர்.

350-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு விலையை குறைத்து உள்ளோம். விலை என்றால் அதற்கான வரியை குறைத்திருக்கிறோம். 5, 18 சதவீதம் என 2 அடுக்காக குறைத்துள்ளோம். இது தவிர தொழில் செய்பவர்கள் 3 நாளில் பதிவு செய்யும் வகையில் கட்டமைப்பை சரி செய்துள்ளோம்.

சாலையோர கடைகளில் விற்கப்படும் பாப்கானுக்கு ஏற்கனவே வரி கிடையாது. ஆனால் தொழிற்சாலையில் தயாரித்த பாப்கார்னை உப்பு போட்டும், சாக்லேட் போட்டும் விற்றனர். அதில் உப்பு போட்ட பாப்கார்னுக்கு 5 சதவீதமும், சாக்லேட் போட்ட பாப்கானுக்கு 18 சதவீதம் எனவும் வகைப் பாடு இருந்தது.

இதுபற்றி ஒரு பாப்கான் விலையை நிதி மந்திரி இப்படி விளக்கி கூறுகி றாரேஎன்று விமர்சித்தனர். கிண்டல் செய்தனர். அதற் குரிய பதிலை சொல்வது எனக்கு இருந்தது. பாப்கார்னுக்கு 2 விலையா? என்று கேட்டனர். இப்போது உணவு பொருட் கள் எல்லாமே 5 சதவீதத் துக்கு வந்து விட்டது அல்லது ஜீரோவுக்கு போய் விட்டது. இப்போது வகைப்பாடு பிரச்சினையே இல்லை.

ஜி.எஸ்.டி. வரி குறைப் பால் பொருட்களின் விலை குறையப் போகிறது. நாட் டில் ஒரு பெரிய விதமான மாறுதல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலமாக வந்து உள்ளது.

இந்த சீர்திருத்தத்தை செய்வதற்கு 5 விதமான செயல்களை மனதில் வைத்து இதை அமல்படுத்தி னோம். தினசரி பயன்படுத் தும் பொருட்களில் மாறுதல் வருமா? ஏழைகள், நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத் தும் பொருட்களை இதில் கொண்டு வருகிறோமா? விவசாயிகளுக்கு உதவியாக இருக்குமா? சிறு-குறு தொழில் செய்பவர்கள் வாங்கும் பொருட்கள் இன்னும் குறைந்த விலை யில் கிடைக்குமா? நமது நாட்டு பொருளாதாரம் விரைவில் வளருமா? என் பதை வைத்துதான் இதை செய்தோம்.

ஒவ்வொரு பெரிய கம்பெனிகளும் விலை குறைப்பை பொதுமக்க ளுக்கு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். எல்லா நிறுவனங்களும் பொருட் களை விலை குறைத்து மக்களுக்கு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பிரதமர் மோடி மக்கள் நலன்கோரி இந்த ஜி.எஸ்.டி. வரி சீர்த்திருத்தத்தின் ஆதா யம் மக்களுக்கு போய் சேர முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

இந்த வரி சீர்த்திருத்தம் மூலம் தமிழ்நாட்டில் என்னென்ன பொருட்கள் விலை குறையும், எந்தெந்த பகுதிகள் பயன் அடையும் என்பதையும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டினார்.

திருப்பூர், கோவை, ஈரோடு பகுதிகளில் உற்பத்தி யாகும் பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள், கைவி னைப் பொருட்கள். காஞ்சீபுரம் பட்டு மற்றும் ஜரிகை வேலைப்பாடு, பொள்ளாச்சி காங்கேயம், கடலூர் பகுதிகளில் உற் பத்தி செய்யப்படும் தென்னை நார் பொருட்கள்.

சிவகாசி, சென்னை பகுதிகளில் உற்பத்தியாகும் காகித தொழில்கள், தஞ்சா வூர் பாரம்பரிய பொம்மை கள், கும்பகோணம் உலோ கப் பொருட்கள். ஸ்ரீபெரும்பு தூர், ஓசூர், கோவை பகுதிகளில் உற்பத்தியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உள்பட தமிழ்நாட்டில் ஏராளமான பொருட்களின் விலை குறையும். இதன் மூலம் சமூக பொருளாதார அம்சங்கள் வலுப்பெறும்.

நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா தலைவர் நயி னார் நாகேந்திரன் சென்னை ஐ.ஐ.டி. இயக்கு னர் காமகோடி, சி.ஐ.ஐ. சேர்மன் உன்னிகிருஷ்ணன், ஏ.இ.பி.சி. துணைத் தலைவர் சக்திவேல், எப்.ஐ.சி.சி.ஐ. சேர்மன், வேலூர் எச்.சி.சி.ஐ. தலைவர் லினேஷ் சனத்குமார், சைமா தலை வர் துரை பழனிசாமி , சென்னை குடிமக்கள் மன்ற தலைவர் கே.டி.ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சென்னை குடிமக்கள் மன்ற செயலாளர் காயத்ரி, சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News