தமிழ்நாடு செய்திகள்
அதிமுகவை திருட்டுக்கடை போல் மாற்றிய எடப்பாடி பழனிசாமி- அமைச்சர் சிவசங்கர்
- அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு செல்போன் தருவதாக கூறினார்கள், அதனை நிறைவேற்றினார்களா?
- அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா?
அதிமுகவை திருட்டுக்கடை போல் எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
திமுகவை உருட்டுக்கடை அல்வா என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமியின் சேர்க்கை சரியில்லாததால் வாய்க்கு வந்ததை பேசுகிறார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.
அதிமுகவை திருட்டுக்கடை போல் எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார்.
ஐவர் அணியாக இருந்த அதிமுக தற்போது இருவர் அணியாக உள்ளது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு செல்போன் தருவதாக கூறினார்கள், அதனை நிறைவேற்றினார்களா?
அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? எனவும் அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.