தமிழ்நாடு செய்திகள்
null

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் கூட்டணி என்று கூற அதிமுகவுக்கு அருகதை இருக்கிறதா?.. ஸ்டாலின் கேள்வி

Published On 2025-04-21 12:13 IST   |   Update On 2025-04-21 13:14:00 IST
  • சட்டமன்றத்தில் அதிமுக - திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
  • நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்பது தொடர்பாக இன்று கூடிய சட்டமன்றத்தில் அதிமுக - திமுக இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.

அப்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதை நாங்கள் மறுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், நிச்சயம் அதனை செய்திருப்போம்.

ஆனால், இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே. 'நீட் தேர்வை ரத்து செய்தால் தான் (பாஜக) கூட்டணியில் இருப்போம் என்று கூற உங்களுக்கு அருகதை இருக்கிறதா? என்று இபிஎஸ்-ஐ நோக்கி கேள்வி எழுப்பினார்.

தவறை சரி செய்வதற்கு உங்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 2026ஆம் ஆண்டில் என்ன, 2031ல் கூட கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது கூட்டணி அமைத்திருக்கிறீர்களே என்றும் இது ஏமாற்றுவேலையல்லவா என்றும்  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

Tags:    

Similar News