தமிழ்நாடு செய்திகள்
பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர்! - கோவையில் பல வீடுகளில் சிசிடிவி வேலை செய்யவில்லை! - மாநகர காவல் ஆணையர்
- கோவையில் 300 சிசிடிவிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.
- பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கோவையில் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.
* கோவையில் பல இடங்களில் வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. பொதுமக்களும் அதனை கவனிக்க வேண்டும்.
* பாதிக்கப்பட்ட இளம்பெண் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்.
* பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
* பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர். எங்கும் எந்த நேரத்திலும் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.
* தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் அளித்து பாதிக்கப்பட்டவர்களை விமர்சிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.