தமிழ்நாடு செய்திகள்
null

'கூட்டணி இல்லாமல் தி.மு.க.-வால் வெல்ல முடியாது' - 2026 தேர்தலுக்கு கூடுதல் தொகுதிகளை கேட்கும் சி.பி.எம்.

Published On 2025-06-10 12:18 IST   |   Update On 2025-06-11 11:39:00 IST
  • கூட்டணி கட்சிகளை மதிப்பதில் திமுகவை எந்த குறையும் சொல்ல முடியாது.
  • ஏற்கனவே திமுக, அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற்று போட்டியிட்டுள்ளோம்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இருந்து திமுக கூட்டணி 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது.

2019 ஆம் ஆண்டு அமைந்த திமுக கூட்டணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. திமுக கூட்டணியில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு என்று சி.பி.எம். மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தோழமைக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறேன். தற்போதும் நீடித்து வரும் ஒற்றுமையை, மேலும் கட்டிக் காப்பாற்றுவதன் மிக அதிக அவசியம் உள்ளது. அதற்கான முறையில் தி.மு.க.வின் அணுகுமுறை இருக்க வேண்டும்.

கூட்டணிக் கட்சிகளை மதிப்பதில் தி.மு.க.வை இன்றைக்கும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. இதே நிலை தொடர வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது.

அன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி எந்த நிலையிலும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் தி.மு.க. ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அது மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது கிடை யாது.

இதுதான் கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாக மிகமிகக் குறைந்த தொகுதியில் ஒப்பந்தம் செய்துகொண்டு போட்டி யிட்டது. அத்தகைய அணுகு முறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது. ஏனென்றால், தமிழ்நாட்டு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் அது நிச்சயமாக நல்லதாக இருக்காது.

ஆகவே, விட்டுக்கொடுப்பது தி.மு.க. தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும். 2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதும், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ப தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு தீர்மானமாகும்.

தி.மு.க. அரசை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளில் சொன்னதையும் செய்திருக்கிறார்கள், சொல்லாததையும் செய்துள்ளார்கள். சொன்னதில் சிலவற்றை இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். எனவே, இருக்கும் பத்து மாத காலத்தில் கடந்த முறை தேர்தலின்போது தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை எவ்வளவு வேகமாக நிறைவேற்ற முடியுமோ அதற்கு முன்வர வேண்டும்.

இத்தகைய எதிர்பார்ப்புகளை நிச்சயமாக நிறை வேற்றி கொடுக்க வேண்டும். இதுதான் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கும் அதில், தி.மு.க. அணி மீண்டும் வெற்றி பெறுவதற்கும், வலுவான அடிப்படையில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

2021 ஆம் ஆண்டு 6 தொகுதிகளில் போட்டியிட்ட சி.பி.எம். 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இம்முறை ஒற்றை இலக்கத்தில் இல்லாமல் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுகவிடம் கேட்டுப்பெற சி.பி.எம். கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News