தமிழ்நாடு செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல்

Published On 2025-06-01 10:59 IST   |   Update On 2025-06-01 10:59:00 IST
  • பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற்றது.

மதுரை உத்தங்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.

முதலமைச்சர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து மன்மோகன் சிங், போப் பிரான்சிஸ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News