தமிழ்நாடு செய்திகள்

நடிகர் மதன் பாப் மறைவு: தே.மு.தி.க. இரங்கல்

Published On 2025-08-03 00:49 IST   |   Update On 2025-08-03 00:49:00 IST
  • மதன் பாப் அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக் கூடியவர்.
  • கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர் என்றார்.

சென்னை:

சினிமா குணச்சித்திர நடிகர் மதன் பாப் (71), சென்னையில் காலமானார்.

இந்நிலையில், மதன் பாப் மறைவுக்கு தே.மு.தி.க. இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார் என்கிற செய்தி வேதனை அளிக்கிறது. கேப்டன் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டவர். கேப்டன் உடன் இணைந்து ஆனஸ்ட் ராஜ், தமிழ்செல்வன் போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர், கேப்டனின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள கொம்புசீவி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

அனைவரிடமும் அன்போடும் பாசத்தோடும் பழகக் கூடியவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான ஒரு மனிதர். நகைச்சுவை உணர்வோடு பேசி அனைவரையும் மகிழ்விப்பவர். அவரது இழப்பு திரை உலகிற்கே பேரிழப்பு, அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவரை இழந்து வாடும் திரையுலகத்தினருக்கும், குடும்பத்தாருக்கும் தே.மு.தி.க. சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News