கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்- தமிழக அரசு
- உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ்.
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும்.
உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக தமிழ்நாடு அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.