தமிழ்நாடு செய்திகள்

3ம் கட்ட அகழாய்வில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுப்பு

Published On 2025-04-04 08:05 IST   |   Update On 2025-04-04 08:05:00 IST
  • 2.64 மில்லி கிராம் எடை கொண்ட செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கிடைக்கப்பெற்றுள்ளது.
  • அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வில், 13 சென்டிமீட்டர் ஆழத்தில் 29.5 மில்லி மீட்டர் நீளமும், 6.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2.64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கிடைக்கப்பெற்றுள்ளது.

பண்டையத் தமிழரின் செழிப்பான வாழ்க்கை முறையையும், அவர்கள் அன்றாடம் வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியதையும் இக்கண்டுபிடிப்புகள் உலகிற்குப் பறைசாற்றுகின்றன.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News