தமிழ்நாடு செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 16ம் தேதி துணை வேந்தவர்கள் ஆலோசனை கூட்டம்
- தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம்.
- துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் வரும் 16ம் தேதி பல்கலைக்கழகங்களின் அனைத்து துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் 16ம் தேதி மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழக பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்கள் ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.