தமிழ்நாடு செய்திகள்
வங்கக்கடலில் உருவாகும் டிட்வா புயல்: தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு - வெதர்மேன் ஹேமச்சந்திரன்
- தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது.
- சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது
மலாக்கா ஜல சந்தி, தெற்கு அந்தமானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவானது. சென்யார் புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் தாழ்வுப் பகுதி நவம்பர் 29ம் தேதி புயலாக மாறக்கூடும் என வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது புயலாக உருவெடுக்கும் பட்சத்தில் 'டிட்வா' என பெயரிடப்படும் என்றும் டிட்வா புயலால் தமிழகத்திற்கு நவம்பர் 29,30ம் தேதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.