தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 8 கி.மீ. வேகம் 10 கி.மீ. வேகம் என படிப்படியாக அதிகரித்து தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னைக்கு தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் உள்ளது. திரிகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே 130 கி.மீ., நாகைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.
தாழ்வு மண்டலம் 8 கி.மீ. வேகம் 10 கி.மீ. வேகம் என படிப்படியாக அதிகரித்து தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெங்கல் புயல் சின்னம் தமிழ்நாட்டை நெருங்கியது. நாகையில் இருந்து 400 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது.
நாகப்பட்டினம் 16.4, வேளாங்கண்ணி 15, கோடியக்கரை 17, வேதாரண்யம் 13, சீர்காழி 10, திருவாரூர் 9.6, செம்பனார்கோவிலில் 5, அதிராம்பட்டினம் 7.7, கடலூர் 8.8, சிதம்பரம் 7.2, மயிலாடுதுறை 7.1, மயிலம் 7.8, மணல்மேடு 8.05 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னை மணலியில் மணலி 13.39, கத்திவாக்கம் 11.19, புழல் 6.95, எண்ணூர் 7.75, மீனம்பாக்கம் 6, பள்ளிக்கரணை 8.56, செங்கல்பட்டு 7.5, மகாபலிபுரம் 7.2, புதுச்சேரி 7.55, காரைக்கால் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும டிப்ளோமா தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.