தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
6 துறைமுகங்களில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரியில் 3-ம் எண் எச்சரிக்கை கூட்டு ஏற்றப்பட்டது.
சென்னை ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சென்றடைந்தது.
எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடியில் 3-ம் எண் கூண்டும், 3 இடங்களில் ( 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து 30 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படை குழு நாகை வந்தடைந்தது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியில் வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலர் ராமன் ஆய்வு.
காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயல் - முன் எச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அனைத்து துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஃபெங்கல் புயலானது சென்னை - கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே வருகிற 30-ந்தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று உருவாகும் ஃபெங்கல் புயல் 30-ந்தேதி கரையை கடக்கும் போது சென்னையில் அதிகனமழை பெய்யும். புயல் கரையை கடந்த பிறகு உள் மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று முதல் மிதமான மழை தொடங்கி படிப்படியாக புயல் கரையை கடக்கும் 30-ந்தேதி கனமழை கொட்டி தீர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி உப்பனாறு பாலம் அருகே குடியிருப்பு, விளைநிலங்களை சூழ்ந்த கடல்நீர்.
கடலூரில் 3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.