ஃபெங்கல் புயலானது சென்னை - கடலூர் மாவட்டம்... ... தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
ஃபெங்கல் புயலானது சென்னை - கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை இடையே வருகிற 30-ந்தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று உருவாகும் ஃபெங்கல் புயல் 30-ந்தேதி கரையை கடக்கும் போது சென்னையில் அதிகனமழை பெய்யும். புயல் கரையை கடந்த பிறகு உள் மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் கொங்கு மண்டலங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று முதல் மிதமான மழை தொடங்கி படிப்படியாக புயல் கரையை கடக்கும் 30-ந்தேதி கனமழை கொட்டி தீர்க்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Update: 2024-11-27 06:53 GMT