தமிழ்நாடு செய்திகள்

வேதாரண்யத்தை நெருங்கியது டிட்வா புயல்

Published On 2025-11-29 12:29 IST   |   Update On 2025-11-29 12:29:00 IST
  • இலங்கைக்கு (யாழ்பாணம்) கிழக்கே 80 கி.மீ., புதுவைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது.
  • நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 6 மணி நேரத்தில் 8 கி.மீ. வேகத்தில் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. இலங்கைக்கு (யாழ்பாணம்) கிழக்கே 80 கி.மீ., புதுவைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் நகர்ந்து வருகிறது. வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் இருக்கிறது. டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து 60 கி.மீ., 50 கி.மீ., 25 கி.மீ. என மையம் கொள்ளும்.

நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ. தூரத்தில் புயல் நிலவ வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News