சென்னைக்கு 290 கி.மீ தொலைவில் "டிட்வா" புயல்
- தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ தூரத்தில் மையம்.
- வேதாரண்யத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் டிட்வா புயல் உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து குறைந்தபட்சமாக 25 கி.மீ தூரத்தில் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
டிட்வா புயல் நள்ளிரவு தொடங்கி நாளை மாலை வரை தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் நிலவ வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வடக்கு- வடமேற்கில் நகர்ந்து 30ம் தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் டிட்வா புயல், வேதாரண்யத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கிழக்கே 110 கி.மீ, புதுவைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவிலும் புயல் நகர்ந்து வருகிறது.