பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து - புதிய கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
- கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.
- ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர். மேலும் வடமாநிலத்தை சேர்ந்தவரை இங்கு பணியமர்த்தும் போது மொழி தெரியாததால் பிரச்சனை ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், செம்மங்குப்பம் ரெயில் கேட்டில் புதிய கேட் கீப்பராக ஆனந்தராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரை தமிழ்நாடில் நியமித்தது சர்ச்சையான நிலையில், தமிழர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரெயில்வே விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியதாக ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.