தமிழ்நாடு செய்திகள்
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து- உண்மை கண்டறியும் குழு விசாரணை
- ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரெயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
- கேட் கீப்பர் அறையைப் பார்வையிட்ட பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில், ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் தெற்கு ரெயில்வே உண்மை கண்டறியும் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். கேட் கீப்பர் அறையைப் பார்வையிட்ட பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர்.
இதை அடுத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த ஓட்டுநர் மற்றும் பள்ளி மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் விசாரித்தனர்.