சினிமா செய்திகள்
null

நடிகர் சிம்பு செலுத்திய ரூ.1 கோடியை திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-12-13 14:53 IST   |   Update On 2024-12-13 15:52:00 IST
  • கொரோனா குமார் படம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனத்திற்கு இடையிலான பிரச்சினை முடிவுக்கு வந்தது.
  • மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பும் திரும்ப பெற்றனர்.

நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய ரூ.1 கோடியை வட்டியுடன் திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா குமார் படம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனத்திற்கு இடையிலான பிரச்சினை முடிவுக்கு வந்ததை அடுத்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, வட்டியுடன் சேர்த்து ரூ.1.04 கோடியை திருப்பித்தர தலைமை பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பும் திரும்ப பெற்றனர்.

வழக்கை இரு தரப்பும் வாபஸ் பெற்றதால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News