தமிழ்நாடு செய்திகள்

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் குழு.. "அரசல் புரசல் செய்திகளுக்கு முடிவு" - பா.சிதம்பரம்

Published On 2025-11-22 14:32 IST   |   Update On 2025-11-22 14:32:00 IST
  • விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்கபோகிறது என ஊகங்கள் எழுந்து வந்தன.
  • மல்லிகார்ஜுன் கார்கே 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. இதற்கிடையே அணமைக் காலமாக காங்கிரஸ் விஜயின் தவெகவுடன் கூட்டணி வைக்கபோகிறது என ஊகங்கள் எழுந்து வந்தன.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்தற்காக இந்த கூட்டணி மாற்றம் அமையும் என்றும் பேச்சுகள் அடிக்கப்பட்டன.

செய்தியாளர்கள் சந்திப்புகளில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இதை தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2026 தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழுவில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து பேர் குழு'வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்.

 இந்தியா கூட்டணி'யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.   

Tags:    

Similar News