தமிழ்நாடு செய்திகள்
கோவை: வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்த 5 கல்லூரி மாணவர்கள் கைது
- கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
- தங்கும் அறையிலேயே மாணவர்கள் கஞ்சா செடி வளர்த்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
கோயம்பத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் தங்கும் அறையில் கஞ்சா செடி வளர்த்த 4 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது தங்கும் அறையில் கஞ்சா செடி வளர்த்து வந்த கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (19), தனுஷ் (19), அவினவ் (19), அனுருத் (19) மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கலைவாணன் (21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெளியில் கஞ்சா வாங்குவது மிகவும் ரிஸ்க் ஆகிவிட்டதால் அறையிலேயே வளர்த்ததாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.