தமிழ்நாடு செய்திகள்
உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! மு.க.ஸ்டாலின்
- தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள்.
- நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னதுபோல கல்லூரிக் கனவு - உயர்வுக்குப் படி - சிகரம் தொடு - நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள் அடுத்து உங்களின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழிகாட்டும், உதவும்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.
தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்! என்று கூறியுள்ளார்.