தமிழ்நாடு செய்திகள்

வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-06-21 12:21 IST   |   Update On 2025-06-21 12:22:00 IST
  • அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்!
  • மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்!

சென்னை:

ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் பார்வைக்கு இன்று திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது:-

தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய தலைவர் கலைஞரின் கனவுப் படைப்பான வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது!

அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்! என்று கூறியுள்ளார். 



Tags:    

Similar News