தமிழ்நாடு செய்திகள்
2026 மட்டுமல்ல 2031, 36 எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- திராவிட மாடல் அரசு மீது மக்கள் காட்டும் ஆதரவை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
- மலர்கண்காட்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது.
நீலகிரி:
உதகை மலைப்பகுதியில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் நீலகிரி எம்.பி.ஆ.ராசாவும் நடைபயிற்சி செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
உதகையில் 5 நாள் பயணம் மிக எழுச்சியாக இருந்தது. மக்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திராவிட மாடல் அரசு மீது மக்கள் காட்டும் ஆதரவை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
மலர்கண்காட்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது.
உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதி கருத்து கேட்ட விவகாரம் தொடர்பாக, மற்ற மாநில முதலமைச்சர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிதான் நீடிக்கும். 2026 மட்டுமல்ல 2031, 36 எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி தான் நீடித்து இருக்கும் என்றார்.