தமிழ்நாடு செய்திகள்
எந்த கொம்பனாலும் தி.மு.க.வை அழிக்க முடியாது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தி.மு.க.வினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
- S.I.R. என்பது நெருக்கடி நிலையை போன்றது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. நிர்வாகியின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்த தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். இதன்பின் அவர் பேசியதாவது:-
* வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை தி.மு.க.வினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
* S.I.R. என்பது நெருக்கடி நிலையை போன்றது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
* தி.மு.க.வை அழித்து விடலாம் என யார் யாரோ புறப்பட்டுள்ளனர். எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.
* யாரும் தி.மு.க.வை எந்த காலத்திலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றார்.